More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Monday 29 June 2015

PHP என்றால் என்ன?

PHP என்பது ஒரு Server Side Scripting language. எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை இணையமூலம் வாங்குவதற்காக ஏதோ ஒரு  பதிப்பகத்தின் இணையதளத்திற்கு செல்கிறீர்கள். அந்த பதிப்பகத்தின் இணையதளம் PHP மூலம் உருவாக்கப்பட்டதெனில்.
அந்த இணைதளத்தில் செய்யும் அனைத்து வேலைகளும் உங்களுடைய கணினியில் (Client Side) Process ஆகாமல், பதிப்பகத்தின் இணையதளம் எந்த வெப் சர்வரில்(Server Side) இருக்கிறதோ அங்கு Process செய்யப்பட்டு உங்களுக்கு தேவையான விபரங்களை இணையதளம்  கொடுக்கும். அவ்வாறு Server இல் செயல்படுத்தப்படும் நிரல்கள் Server Side Scripting Language எனப்படும். PHP நிரல்கள் அனைத்தும் Server Side இல் Process செய்யப்படுவதால். PHP ஒரு  server side scripting language ஆகும்.
Ruby, Python, Perl ஆகிய மொழிகளும் Server Side Scripting Language ஆக பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே PHP யும் இருந்தாலும், PHP சில தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது. அது என்னவெனில் நம்முடைய இணையதள உருவாக்க வேலைகளை எளிமையாக செய்வதெற்கென நிறைய Extension களை வைத்திருக்கிறது.
குறிப்பாக Database இல் தகவல்களை சேமிப்பதற்கும், Database இல் இருக்கும் தகவல்களை இணையதளத்தின் மூலம் பெறுவதற்கும், இணையதளங்களை Dynamic ஆக வடிவமைக்கவும், Content களை திறம்பட கையாள்வதற்கும் மிகவும் எளிமையான வழிகளை PHP கொண்டுள்ளது. அதனால் மேற்காணும் வேலைகளை நாம் மற்ற மொழிகளில் செய்வதை விட PHP யில் எளிமையாக செய்யலாம்.
PHP -யால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும்?
  • Dynamic Page Content களை உருவாக்க முடியும்.
  • Web Server இல் கோப்புகளை உருவாக்குதல், அழித்தல், நீக்குதல், திறத்தல், எழுதுதல் ஆகியவைகளை செய்ய முடியும்.
  • படிவத்தின் தகவல்களை (Form Data) சேகரிக்க முடியும்.
  • Cookies களை அனுப்ப மற்றும் பெய முடியும்.
  • தகவல்தளத்தில் (Database) தகவல்களை சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் ஆகியவைகளை செய்ய முடியும்.
  • பயனர்களினுடைய (Users) செயல்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.
  • தகவல்களை Encrypt செய்ய முடியும்.
  • HTML ஆக மட்டுமில்லாமல், Images, PDF Files, Flash Movies XML, XHTML ஆகிய வடிவங்களிலும் வெளியீடுகளை கொண்டு வர முடியும்.
ஏன் PHP?
  • பல்வேறு இயங்குதளங்களில் PHP – ஐ இயக்க முடியும். (உதாரணமாக. Windows, Linux, Unix, Mac OS X, etc…)
  • இன்றைக்கு பயன்பாட்டில் உள்ள அனைத்து Server (Apache, IIS, etc ) களுடனும் ஒத்து இயங்கக்கூடியது.
  • MySQL, SQLite, Postgres, Oracle, MS SQL  போன்ற அனைத்து தகவல்தளங்களையும் PHP ஆதரிக்கிறது.
  • PHP என்பது அனைவருக்கும் இலவசம். PHP யினுடைய அதிகாரப்பூர்வமான இணைதளத்தில்(http://www.php.net) இருந்து அனைவரும் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • கற்றுக்கொள்ள எளிமையான மொழியாகவும், Server Side இல் சிறப்பாக இயங்க்ககூடிய மொழியாகவும் PHP இருக்கிறது.
PHP எப்படி வேலை செய்கிறது? என்று அடுத்த பதிவில் காணலாம்….
PHP Essentials என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு – ஆர்.கதிர்வேல்

0 on: "PHP என்றால் என்ன?"

Ads Inside Post