More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Monday 29 June 2015

PHP Comments


php tamil commetns
அனைத்து கணினி நிரல் மொழிகளிலுமே குறிப்புரை (comments) வசதி இருக்கிறது. இந்த குறிப்புரை -இல் எழுத்தப்படும் வரிகள் நிரலின் பகுதியாக கருதப்படாது. அதாவது comment இல் எழுதப்படும் வரிகள்  நிரல் வரிகளாக கருத்தில் கொண்டு படிக்கவோ/இயக்கவோ பட மாட்டாது. நிரலை எழுதியவரைத் தவிர மற்றவர்கள் அந்த நிரலைப் பார்வையிடும் போது இந்த குறிப்புரை பயன்படுகிறது அவ்வளவுதான்.
PHP -ஐப் பொறுத்தமட்டிலே இந்த குறிப்புரை வரிகள் PHP pre-processor ஆல் புறக்கணிக்கப்படும். முழுக்கமுழுக்க மனிதர்கள் புரிந்து கொள்வதற்காக மட்டுமே இந்த குறிப்புரை.

கீழ்கண்ட வழிகளில் குறிப்புரை பயன்படலாம்:
  1. நிரல் வரிகள் என்ன காரணத்திற்காக எழுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் குறிப்பாக பயன்படலாம்.
  2. குறிப்பிட்ட காலம் கழித்து நீங்கள் எழுதிய நிரலை, நீங்களே பார்வையிடும் போது அதை எதற்காக எழுதினீர்கள் என்பது மறந்து போகலாம். அந்த சமயத்தில் இந்த குறிப்புரை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
  3. நீங்கள்  குறிப்புரை ஐக் கொண்டு நிரல்களை உருவாக்கினால் அந்த நிரலை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
  4. ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் எழுதிய நிரலை பாதியோடு விட்டு விட்டுச் செல்கிறீர்கள், அந்த நேரத்தில் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வேறொரு பணியாளர் அந்த நிரலை தொடர்ந்து எழுத முற்படும் போது நீங்கள் கொடுத்த குறிப்புரை அவருக்கு மிகப்பெரிய உதவியாகவும். நிரலை விரைவாக எழுதவும் உதவும்.
  5. ஒரு நல்ல நிரலாளர் என்பவர் குறிப்புரை இல்லாமல் நிரல் எழுதமாட்டார். குறிப்புரை கொண்டு நிரல் எழுதுவதே ஒரு நல்ல நிரலாளருக்கு அழுகு.
PHP யில் இரண்டு விதமான குறிப்புரைகள் இருக்கின்றன.
  1. Single line குறிப்புரை (ஒற்றை வரி குறிப்புரை)
  2. Multi line குறிப்புரை (பலவரி குறிப்புரை)
PHP யினுடைய குறிப்புரை C, C++ and Java நிரல்களின் குறிப்புரை முறைகளை ஒத்தே இருக்கிறது. இந்த மொழிகளில் ஏற்கனவே பரிச்சயம் உள்ளவர்களுக்கு PHP குறிப்புரை வியப்பாகத் தோன்றாது.
-> ஒற்றைவரி குறிப்புரை:
இரண்டு முன்னோக்கிய சாய்வுகளைக் கொண்டு இருக்கும்.
//This is single line comment.
உதாரணம்:
<?php
//php coding start here
echo “Hello PHP!”;     //echo statemet is used to print the statement
//php coding end here
?>
ஒற்றைவரி குறிப்புரை ஒரு புதிய வரியாகவும் இருக்கலாம் அல்லது ஒரு நிரல் வரியினுடைய இறுதியில் இருந்தும் தொடங்கலாம். தற்காலிகமாக ஒரு நிரல்வரியை நீக்குவதற்கு ஒற்றைவரி குறிப்புரை பயன்படும்.
உதாரணம் :
<?php
//echo “Hello PHP!”;
echo “Hello Linux!”;
?>
பலவரி குறிப்புரை:
பலவரி குறிப்புரை /* மற்றும் */  ஆகிய இரண்டு குறியீட்டிற்குள் இருக்கும். /* குறியீடு குறிப்புரையின் ஆரம்பத்தையும், */ குறியீடு குறிப்புரையின் முடிவையும் உணர்த்துகிறது.
கீழ்காணும் உதாரணத்தை பாருங்கள்.
<?php
/* This is a
multiline
comments
*/
echo “Hello PHP”;
?>
ஒரு வரிகளுக்கு மேலாக குறிப்புரை எழுத வேண்டிய அவசியம் உள்ள போது பலவரி குறிப்புரை உதவியாக இருக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட நிரல்வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும். பலவரி குறிப்புரை உதவும்.
அடுத்து வருவது : PHP மாறிலிகளை பற்றி…

0 on: "PHP Comments "

Ads Inside Post