More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Thursday 16 July 2015

The best Linux distributions for beginners

கடினமான பதில் தான் இருந்தாலும் இங்கு சில எளிமையான லினக்ஸ் வழங்கல்களை பற்றி பார்க்கலாம்.இப்பதிவு புதிதாக லினக்ஸ் பயன்படுத்த ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

லினக்ஸ் இயங்குதளம் என்றால் என்ன என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.அது உபயோகிக்க கடினம் என்ற தங்களின் தவறான என்னத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.

லினக்ஸ் என்ற ஒரு இயங்குதளம் உருவாக்கப்படாமல் இருந்து இருந்தால் இன்றைய கணினி உலகம் எத்தனை யுகங்கள் எடுத்தாலும் மைக்ரோசாப்டின் பிடியில் இருந்து தப்பி இருக்க முடியாது.என்றுதான் கூற வேண்டும்.அப்படி ஒரு ஆதிக்கம் இன்றைய சூழலிலும் நிலவி வருகின்றது.அப்படி என்னதான் அந்த இயங்குதளத்தில் உள்ளதோ தெரியவில்லை.

என்னுடைய நிலமையும் கணினி வாங்கிய பொழுது அப்படிதான் இருந்தது.அதாவது நான் கணினி வாங்கிய பொழுது எனக்கு Windows XP Professional பதிந்து கொடுத்தார்கள் முதல் ஒரு வருடம் நானும் அதை ஆர்வமாக பயன்படுத்தினேன்.நான் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் போது எமக்கு கணினியியல் பாடத்தில் லினக்ஸ் பற்றிய ஒரு தொகுதி கொடுக்கப்பட்டு இருந்தது அது எம்மை மிகவும் கவர்ந்தது லினக்ஸ் பற்றிய ஆர்வம் எனக்குள் ஊற்றெடுக்க ஆரம்பித்தது அதனை ஒரு முறையாவது பயன்படுத்தி பார்க்க வேண்டும் என எண்ணிய நான் எமது கணினி ஆசிரியரை அனுகினேன் அவரோ என்னை இனையத்தில் இருந்து பதிவிரக்கம் செய்து கொள்ளும் படி கூறினார் என்ன செய்வேன் என்னிடமோ இணையம் இல்லை இருந்தாலும் எமது முயற்சியை கைவிடவில்லை விடுமுறை நாட்களில் இணையதளம் அளிக்கும் வளாகத்திற்கு சென்றேன் எமக்கோ லினக்ஸ் எப்படி தறவிரக்கம் செய்யவேண்டும் என்று தெரியவில்லை சரி அங்கே உள்ள நபர்களிடம் விசாரித்தேன் அவர்களோ என்னை லினக்ஸ் உபயோகிக்க கடினமாக இருக்கும் வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பினர்.நானோ எதையும் கண்டு கொள்ளாமல் கிளம்பி வந்துவிட்டேன்.ஆனாலும் எமக்கு லினக்ஸ் மேல் கொண்ட ஆர்வம் குறியவே இல்லை ஒருமுறை எமது உறவினர் ஒருவரின் மூலம் UBUNTU 8.10 குறுவட்டு கிடைத்தது அதை அவர் இது ஒரு லினக்ஸ் வழங்கல் என்றும் இது தமக்கு தேவையில்லை அதனால் அதை குப்பையில் போட்டுவிடும்படியும் கூறினார்.நானோ அண்ணா நான் இந்த குறுவட்டை வைத்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு உடனடியாக எமது வீட்டுக்கு வந்து எமது கணினியில் உள்ள Windows Xp ஐ இயக்கி அதன் உள்ளே Ubuntu 8.10 குறுவட்டை இயக்கினேன் முதலில் ஒன்றுமே புரியவில்லை ஒரு வழியாக சமாளித்து நிறுவி விட்டேன் கணினியை மறுதொடக்கம் செய்த பின் எமது கணினியில் இரண்டு இயக்க முறமைகள் இருந்தது எனக்கோ ஆச்சரியம் அது என்னவென்றால் நாமா லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவினோம் என்று சரி அடுத்ததாக உள்ளே சென்றோன் அங்கு நான் கண்ட காட்சிகள் என்னை அப்படியே அசந்து போக செய்தது என்ன ஒரு அழகான இயங்குதளம் அப்படியே அசந்துபோய்விட்டேன். முதன் முதலில் எமது கணினியில் நான் நிறுவி பழகிய இயங்குதளம் லினக்ஸ் தான். பின் நாட்களில் நான் லினக்ஸ் எவ்வாறு முறையாக நிறுவுவது என்று முழுமையாக கற்றுக்கொண்டேன் என்னுடைய அனுபவத்தில் இருந்து கூறினால் லினக்ஸ் நிறுவுவது ஒன்றும் அவ்வளவு கடினம் என்று கூறவே மாட்டேன்.இன்றளவும் நான் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம் லினக்ஸ் தான் 

லினக்ஸ் பற்றி விரிவாக அடுத்த பதிவில் காணலாம்.இப்பொழுது அதன் பிரிவுகளை பற்றி நாம் இங்கே காணலாம் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் லினக்ஸில் நிறைய பிரிவுகள் உள்ளது உங்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.அவற்றில் சில உங்களுக்காக.


Ubuntu is a great place to start


நான் முதன் முதலாக பயன்படுத்திய லினக்ஸ் வழங்கல்களில் அருமையான என் மனம் கவர்ந்த இயங்குதளம் ஆகும்.இன்றளவும் UBUNTU வே எனது விருப்பமான தேர்வாகும்.எமது மடிக்கணினியில் நான் இன்றளவும் UBUNTU வை பயன்படுத்துகிறேன்.இதன் சிறப்பு ஆறுமாத காலத்திற்கு ஒரு முறை புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது.

ubuntu

தறவிறக்க சுட்டி:- Click Now

Linux Mint is very popular, too


லினக்ஸ் மிண்ட் இதுவும் லினக்ஸ் வழங்களில் ஒன்று ஆகும்.அருமையாகவும் எளிமையாகவும் இருக்கும் விண்டோஸ் உபயோகிக்க பழகியவர்கள் லினக்ஸ் கடினம் என்று கூறுபவர்கள் இதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தியபின் கூறுங்கள்.

linux mint cinnamon

தறவிறக்க சுட்டி:- Click Now then Choose any Country to Download

Zorin is very Familiar  to all


சோரின் லினக்ஸ் விண்டோஸ் பயன்படுத்தி பழகியவர்களுக்கு அதன் தோற்றத்தை அப்படியே கொடுக்கும் இயங்குதளம் சோரின் ஆகும். அதாவது நீங்கள் விண்டோஸ் தான் உபயோகிப்பீர்கள் ஆனால் லினக்ஸில் இருப்பீர்கள்.


தறவிறக்க சுட்டி:- Click Now

இப்பதிவில் மூன்று பிரிவுகளை மட்டுமே பட்டியல் இட்டுள்ளேன் இது என்னுடைய விருப்ப தேர்வு ஆகும் இது போன்று நிறைய அழகிய அருமையான லினக்ஸ் வழங்கள்கள் உள்ளது அதை அடுத்த பதிவில் காணலாம்.

நன்றி...!!!

1 on: "The best Linux distributions for beginners"
  1. Nice post. Today tech tips is most popular online tech tips and trick information in world. If you need
    Best Linux Distributions for Beginners follow this website.

    ReplyDelete

Ads Inside Post